Thursday, November 2, 2023

திருவள்ளுவர் விருது பட்டியல்

 

அறிமுகம்

 

தமிழ்நாடு அரசு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் நெறிபரப்பும் பெருநோக்கில் ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாளில் திருவள்ளுவர் திருநாள் விழாவினை அரசு விழாவாகச் சீரும் சிறப்புமாக நடத்திவருகிறது. அந்தவகையில் திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர் ஒருவருக்கு 1986 முதல் ஆண்டுதோறும் திருவள்ளுவர் திருநாள் விழாவில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

விருது பெற்றவர்கள்

  • 1986 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்
  • 1987- கி.ஆ.பெ. விசுவநாதம்
  • 1988- ச. தண்டபாணி தேசிகர்
  • 1989 - வ.சு. ப. மாணிக்கம்
  • 1990 - கு.ச. ஆனந்தன்
  • 1991 - சுந்தர சண்முகனார்
  • 1992 - நாவலர் இரா. நெடுஞ்செழியன்
  • 1993 - கல்லை தே. கண்ணன்
  • 1994 - திருக்குறளார் வீ. முனுசாமி
  • 1995 - க. சிவகாமசுந்தரி
  • 1996 - முனைவர் மு. கோவிந்தசாமி
  • 1997 - பேராசிரியர் கு. மோகனராசு
  • 1998 - முனைவர் இரா. சாரங்கபாணி
  • 1999 - முனைவர் வா. செ. குழந்தைசாமி
  • 2000 - த.சி.க. கண்ணன்
  • 2001 - பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன்
  • 2002 - முனைவர் இ. சுந்தரமூர்த்தி
  • 2003 - முனைவர் கு. மங்கையர்க்கரசி
  • 2004 - இரா. முத்துக்குமாரசாமி
  • 2005 - பெரும்புலவர் ப. அரங்கசாமி
  • 2006 - முனைவர் ஆறு. அழகப்பன்
  • 2007 - முனைவர் . க. ப. அறவாணன்
  • 2008 - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
  • 2009 -முனைவர் பொற்கோ
  • 2010 - ஐராவதம் மகாதேவன்
  • 2011 - முனைவர் பா. வளவன் அரசு
  • 2012 - புலவர் செ. வரதராசன்
  • 2013 - டாக்டர் ந. முருகன் (சேயோன்)
  • 2014 - கவிஞர் யூசி
  • 2015 - கே. பாஸ்கரன்
  • 2016 - வி.ஜி.சந்தோஷம்
  • 2017 - திரு. வீரமணி
  • 2018 - முனைவர் கோ. பெரியண்ணன்
  • 2019 - முனைவர் மு.கௌ.அன்வர் பாட்சா
  • 2020  திரு.ந.நித்தியானந்த பாரதி

ஆதாரம் : தமிழ் வளர்ச்சித்துறை

No comments:

Post a Comment